Tuesday, May 27, 2008

'டைட்டானிக் மிஷன்' என்ற பெயரில் டூப் விட்ட அமெரிக்கா!


டைட்டானிக் கப்பலைக் கண்டுபிடிக்கப் போவதாக கூறிக் கொண்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது அணு சக்திக் கப்பலை அமெரிக்கா தேடிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.1912ம் ஆண்டு கடலில் மூழ்கிய கப்பல் டைட்டானிக். இதில் 1500 பேர் பலியானார்கள். டைட்டானிக் கப்பலைத் தேட அவ்வப்போது கடல் பயணங்கள் நடந்துள்ளன. ஆனால் டைட்டானிக் கப்பலைத் தேடுவதாக கூறி விட்டு, கடலில் மூழ்கி விட்ட தங்களது இரு கப்பல்களை அமெரிக்கா தேடிய கதை வெளியாகியுள்ளது.1985ல் இந்த டூப் மிஷனை மேற்கொண்டது அமெரிக்கா. பாப் பல்லார்ட் என்பவர்தான் இந்த மிஷனுக்குத் தலைமை தாங்கினார். சமீபத்தில் இவர் தான் மேற்கொண்ட டைட்டானிக் மிஷனின் பின்னணியை புட்டுப் புட்டு வைத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் அப்போது மேற்கொண்ட பயணம் டைட்டானிக் கப்பலைத் தேடுவதற்காக மேற்கொள்ளப்பட்டதல்ல. உண்மையில், கடலில் மூழ்கிப் போய் விட்ட 2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரு அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் குறித்த ஆய்வுக்காகவே அப்போது நாங்கள் கடல் பயணம் மேற்கொண்டோம்.இதை வெளியில் சொல்லக் கூடாது என்று அப்போது எனக்கு நெருக்கடி இருந்தது. இதனால்தான் அதைச் சொல்ல முடியவில்லை. இப்போது அந்த நெருக்கடி இல்லை. எனவே உண்மையை சொல்கிறேன்.தகவல் சேகரிக்க 12 நாள் அவகாசம் மட்டுமே தரப்பட்டது. அதற்குள் மூழ்கி விட்ட நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து ஆய்வு செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. அது ஒரு ரகசியப் பயணம்.தகவல் சேகரிப்பது மட்டுமே எனக்குக் கொடுக்கப்பட்ட பணியாகும் என்றார் பல்லார்ட்.அமெரிக்கா தொலைத்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றின் பெயர் யுஎஸ்ஸ் த்ரெஷர், இன்னொரு கப்பலின் பெயர் யுஎஸ்எஸ் ஸ்கார்பியோன். இரு கப்பல்களிலும் 200க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.இதில் 1963ம் ஆண்டு த்ரஷர் காணாமல் போனது. 68ல் ஸ்கார்பியோன் காணாமல் போனது.இந்தக் கப்பல்களில் ஒன்றை அப்போதைய சோவியத் யூனியன் படைகள் மூழ்கடித்திருக்கக் கூடும் என்பது அமெரிக்காவின் சந்தேகம்.இக்கப்பல்களைக் கண்டுபிடிக்கும் பணி பல்லார்டைத் தேடி வந்ததே சுவாரஸ்யமான விஷயம். கடலியல் ஆய்வாளரான பல்லார்ட், தனது ரோபோட் முறையிலான ஆய்வுக் கப்பலைப் பயன்படுத்தி டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்யத் தீர்மானித்தார்.இதற்கான அனுமதியை வாங்க கடற்படை அதிகாரிகளை சந்தித்தார். அப்போது அதை அப்புறம் பார்க்கலாம், முதலில் இந்த இரு கப்பல்களையும் தேடிக் கண்டுபிடித்து தகவல் கொண்டு வாருங்கள் என்று கடற்படை கேட்டுக் கொண்டதாம்.இதையடுத்து அமெரிக்க கடற்படைக்காக, டைட்டானிக் பயணம் என்ற பெயரில், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடும் பயணத்தை மேற்கொண்டது பல்லார்ட் தலைமையிலான குழு.பல்லார்ட் கடலுக்குள் சென்று காணாமல் போன இரு கப்பல்களின் சிதைவுகளையும் கண்டுபிடித்து அது தொடர்பான தகவல்களை அமெரிக்க கடற்படையிடம் வழங்கினார். இந்த ஆய்வின் முடிவில் ஸ்கார்பியோன் வேறு எந்த நாட்டுப் படையாலும் தாக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. அது அனுப்பிய குண்டு அதன் மீதே விழுந்ததால்தான் அது சேதமடைந்ததாகவும் தெரிய வந்தது.இந்தப் பயணத்தின்போது கிடைத்த கேப்பில் டைட்டானிக் ஆய்வையும் மேற்கொண்டாராம் பல்லார்ட்.

பள்ளிக்கு வந்தால் ரூ. 1 பரிசு

தேனி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில், பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினசரி 1 ரூபாய் பரிசு அளிக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பிள்ளைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நூதனத் திட்டத்தை பள்ளி நிர்வாகம் அமல்படுத்தியுள்ளதாம்.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நாளுகக்கு நாள் குறைந்து வருகிறது. பல அரசுப் பள்ளிகளில் நல்ல தரமான கல்வி வழங்கப்பட்டபோதிலும் கூட, பணத்தை சுரண்டும் தனியார் பள்ளிகள் மீதுதான் பெற்றோர்களுக்கு மோகம் அதிகமாக உள்ளது. எவ்வளவு கேட்டாலும் கண்ணை மூடிக் கொண்டு கொட்டிக் கொடுக்கவே பெற்றோர்கள் விரும்புகின்றனர்.தனியார் பள்ளிகளில் தங்களது பிள்ளைகள் படித்தால்தான் அது கெளரவம் என்ற தேவையில்லாத ஒரு கருத்தும் பெற்றோர்களிடம் உள்ளது.இந்த நிலையில் தேனி அருகே உள்ள போடி பிச்சாண்டிபட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு ரூபாய் வழங்க கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .இந்த திட்டம் இந்த ஆண்டு முதலே அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு பள்ளியில் சேரும் முதல் ஐம்பது மாணவர்களுக்கு இலவச சிலேட் , பை , சோப்பு முதலியவை கொடுக்க போகிறார்கள். எப்படியோ குழந்தைகள் படித்தால் சரிதான்.

கார்த்தியின் 'மக்கள் நல மன்றம்'


நடிகர் கார்த்தி சமூக சேவையை குறிக்கோளாகக் கொண்டு, மக்கள் நல மன்றம் என்ற பெயரில் புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளார்.நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தி, சூர்யாவின் தம்பி. இவர் பருத்தி வீரன் மூலம் ஹீரோவானவர். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந் நிலையில், நேற்று தனது பிறந்த நாளை கார்த்தி ரசிகர்களுடன் கொண்டாடினார். பிறந்த நாள் விழா தி.நகர் பிட்டி. தியாகராயர் அரங்கில் நடந்தது.இதில் சென்னையைச் சேர்ந்த ரசிகர் மன்றங்கள் சார்பாக ஊனமுற்றோருக்கு சைக்கிள்கள், தையல் இயந்திரங்கள், மாணவ, மாணவியருக்கு பாடப் புத்தகங்கள், பேனா உள்ளிட்டவற்றை கார்த்தி வழங்கினார்.இதையடுத்து மக்கள் நல மன்றம் என்கிற சமூக சேவை அமைப்பு தொடங்கப்படுவதாகவும் அறிவித்தார்.நிகழ்ச்சியில் கார்த்தி பேசுகையில், எங்களை வாழ வைக்கும் ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதன் விளைவுதான் இந்த மக்கள் நல மன்றம். ஏற்கனவே சிவகுமார் அறக்கட்டளை மூலமாக என்னுடைய தந்தையும், அகரம் பவுண்டேஷன் சார்பில் சூர்யாவும் மாணவர்களின் கல்விக்காக பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.என் பங்குக்கு நானும் ஏதாவது செய்ய விரும்பினேன். அதற்கான முதல் படிதான் இந்த விழா.ரசிகர் மன்றம் என்றால் உருப்படாதவர்கள் என்ற பெயரை மாற்றி, சமூக அக்கறையுடையவர்களாகவும், மக்களுக்கு சேவை செய்பவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் மக்கள் நல மன்றம் என்று பெயரிட்டிருக்கிறோம்.இந்த அமைப்பின் மூலம் நிறைய நல்ல விஷயங்களை செய்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் கார்த்தி.மன்றத்தின் அகில இந்திய கெளரவத் தலைவராக ஞானவேல், தலைவராக பரமு, செயலாளராக வீரமணி ஆகியோர் செயல்படவுள்ளனர்.இந்த விழாவுக்கு முன்னதாக, திருவான்மியூரில் கார்த்தி ரத்ததானம் செய்தார். மேலும், அடையார் ஒய்.ஆர்.ஜி.கேர் மருத்துவ மையத்திற்கு சென்று எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் காசோலையையைம் வழங்கினார்.
வாழ்க நடிகரின் சமூக சேவை.....
உங்கள்.....
இன்ஷ்ட்ருகிங் .

Monday, May 19, 2008

கையெழுத்து தெளிவா இருக்கணும்!!!!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெட்ரிஸ் இன்போடெக் லிட் என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் நீதிமன்றம், தங்களுக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட்டை பிறப்பித்துள்ளது. அது எதிரானது, அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.இந்த மனுவை நீதிபதி விபின் சங்கி விசாரித்தார். அப்போது, கீழ் நீதிமன்ற தீர்ப்பு அறிக்கையை நீதிபதி படித்து பார்த்தார். ஆனால் தீர்ப்பை படிக்க முடியாமல் திணறினார் நீதிபதி. காரணம் அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் கையெழுத்து அவருக்குப் புரியவில்லை.இதனால் டென்ஷனான நீதிபதி பவிபின் சங்கி, மெட்ரோபாலிடன் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு படிப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. புரியும் வகையில் தீர்ப்பை எழுத வேண்டும். அவர் மட்டும் படித்தற்கல்ல தீர்ப்பு. அதை யார், எப்போது படித்தாலும் புரிய வேண்டும். புரியும்படி எழுத அவர் பழக வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

Saturday, May 17, 2008

இந்தியாவில் போலி மருந்து !!!

இந்தியாவில் விற்பனை செய்யும் மருந்து வகைகளில் சுமார் 20 விழுக்காடு
போலி மருந்துகளே என அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருந்துகள் நோயை தீர்ப்பதற்கு பதிலாக புது நோய்களை உருவாக்கியும் விடும் அபாயம் உள்ளது. மரணத்துக்கு வழிகோலும் இந்த போலி மருந்து விற்பனை ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ந்து வருகிறது. உலக அளவில் விற்பனையாகும் போலி மருந்துகளில் 75 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்று பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றொரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையை உசுப்பேற்றியுள்ளது. உயிர்குடிக்கும் போலி மருந்து மார்கெட் குறித்த கண்காணிப்பில் அதிகாரிகள் அதிரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி சுரேந்தர் சிங் தலைமையில் போலி மருந்து மார்க்கெட் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது. 6 மாத கால அவகாசத்தில் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும். மருந்து ஆய்வாளர்களே நோயாளிகளாக சென்று 31,000 மருந்துகளை சாம்பிள்களாக பெற்று பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது...
ஏதோ நல்லது நடந்தா சரி....

சுல்தான் தி வார்ரியர்!!!!


முதல் முறையாக தமிழ் படம் ஒன்று உலக அளவிலான சந்தைக்கு போகிறது. அந்த பெருமையைக் கொடுத்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி அனிமேஷனில் நடிக்கும் சுல்தான் தி வேரியர். ரஜினி நடித்து வெளியான படங்கள் தமிழகத்திலும் உள்நாட்டிலும் அதிக நாட்கள் ஓடுவது சாதாரண விஷயம். ஆனால் ஜப்பானில் 400 நாட்கள் வரை ஓடி சக்கைப் போடு போட்டது முத்து. அதைத் தொடர்ந்து உலகளவில் ரஜினியின் படத்துக்கு தனி மவுசு ஏற்பட்டது.சமீபத்தில் 80 கோடி பட்ஜெட்டில் ரஜினி நடித்து வெளியான சிவாஜி படம் உலகளவில் ரெகார்ட் பிரேக் செய்தது. இது தமிழ் சினிமாவுக்கான வர்த்தகத்தையும் தலைநிமிர வைத்தது. தற்போது தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக தயாராகி கொண்டிருக்கும் குசேலன் படத்தின் உள்நாட்டு உரிமையை சாய்மீரா நிறுவனம் ரூ.64 கோடிக்கு வாங்கியுள்ளது. வெளிநாட்டு உரிமையை ரூ.40 கோடி கொடுத்து ஐங்கரன் வாங்கியுள்ளது.உலக மார்க்கெட்டில் எகிறும் ரஜினியின் படங்களின் அடுத்த வரிசையில் இருப்பது சுல்தான் தி வேரியர். அனிமேஷனில் ரஜினி கலக்கும் இந்த படம் ரஜினி மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோஸ், அனில் அம்பானியின் அட்லாப்ஸ் மற்றும் வார்னர் பிரதர்ஸ் ஆகியவையின் கூட்டு தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது.இந்தியாவில் மிக அதிகமாக 70 கோடி பட்ஜெட்டில் இந்த அனிமேட்டட் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ரூ.250 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1700-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.70 லட்சத்தில் உருவாக இருந்த இந்த படம், சிவாஜியின் சூப்பர் டூப்பர் ஹிட்டினால் 70 கோடி பட்ஜெட்டுக்கு உயர்ந்துள்ளது. ரஜினியின் எல்லா வயது ரசிகர்களும் ஆதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படமாக உள்ளது சுல்தான் தி வேரியர்.சுல்தானை தொடர்ந்து வார்னர் பிரதர்சுடன் இணைந்து ஆக்கர் ஸ்டூடியோஸ், பில்லாவின் அடுத்த பார்ட்டை தயாரிக்க உள்ளது. அதில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கிறார்.


Monday, May 12, 2008

என்ன கொடுமை சார் இது ?

அமெரிக்கா அதிபரின் தற்போதைய ஆய்வறிக்கையை அனைவரும் அறிந்திருப்பீர்கள் . அதாவது உலகளாவிய உணவுப்பொருள் விலையேற்றத்துக்கு காரணம் இந்தியர்களும் சீனர்களும் நல்ல சத்தான உணவு வகைகளை உண்பதே காரணமாம். ஒரு நாட்டு மக்கள் சத்தான உணவை சாப்பிடுவது அவர்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்தை காட்டுகிறது.அதில் அமெரிக்காவிற்கு என்ன வருத்தம் என புரியவில்லை.போதாதென்று கச்சாஎண்ணெய் விலையேற்றத்துக்கும் இந்தியர்கள் தான் காரணம் என்று மேலும் குற்றம் சாட்டியுள்ளது... என்ன கொடுமை சார் இது......

Friday, May 9, 2008

ஆச்சர்யமான உண்மை !!!

வணக்கம் என்னுடைய முதல் ப்லோகிற்கு வந்ததற்கு நன்றி. சரி மேடேற சொல்லுடானு நீங்க திட்றது காதுல விழுது... சொல்றேன்.
நான் திருவனந்தபுரத்துல சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்ணிற்றுகேன். வழக்கமா ஒரு ஹோடேல லஞ்ச் சாப்பிட போவேன். நேற்று அப்படி போகும் போது ஹோடேல வொர்க் பண்ற அண்ணன் ஒருத்தர பார்த்து ஸ்மைல் பண்ணினார். அவரு யாருன்னு பார்த்தேன்.அவர் ரொம்ப சிம்ப்ளா இருந்தார்.
நான் அந்த அண்ணன் கிட்ட யாரு அவருன்னு கேட்டப்ப அவரு சொன்னாரு அவரு தான் திருவனந்தபுரம் எம்.பி. னு. எனக்கு ஒரே ஷாக். என்னடா ஒரு எம்.பி எந்த பந்தாவும் இல்லாம கார் இல்லாம ரொம்ப சிம்ப்ளா சாதரண ஹோடேல்கு வந்திருகாறேனு. இந்த சந்தேகத்த அந்த அண்ணன் கிட்டயே கேட்டேன். அவரு சொன்னாரு இவரு என்ன கேரள டீரன்ச்போர்ட் மிநிச்டரே இங்க நடந்து வந்து தான் சாப்பிடுவாருனு. அந்த ஹோட்டல் கேரள சட்டமன்றத்துக்கு கொஞ்சம் தள்ளி இருந்தது. எனக்கு ஆச்சர்யம் தாங்கல. பக்கத்து வீட்டு பங்க்சனுகே ௧0 கார்ல போற நம்ம மிநிச்டேர்ஸ் எங்க இங்க நடந்து போற மிநிச்டேர்ஸ் எங்க?????
கேரளா உண்மைலையே டாப் தான்....

ஆரம்பம்....

சரி இன்னிக்கு ப்ளோக் ஸ்டார்ட் பண்ணியாச்சு... ரெண்டு போஸ்டும் பண்ணியாச்சு... நாளைக்கு கண்டிப்பா உபயோகமான மட்டேர்ஸ் சொல்றேன்..

என் எண்ணங்கள்!!!

எதோ ஒரு ப்ளோக் ஆரம்பிச்சு வைப்போம்னு இத ஆரம்பிச்சேன் ஆறு மாசத்துக்கு முன்னாடி. இப்போதான் இதுக்கு ஒரு விடிவு காலம். இனிமே டெய்லி வந்து இம்சை பண்ணுவேன்.... தயாரா இருங்க...
என்ன ரெடி யா?

முதல் பயணம்!!!

வணக்கம் !!!
இது என்னுடைய முதல் பதிவு. பயணம் என இதற்கு தலைப்பு கொடுத்துள்ளேன். பயணம் சிறக்க உங்கள் அன்பும் வழிகாட்டுதலும் தேவை.

தற்சமயம் பார்ப்போர்