Monday, June 9, 2008

அவள் மெல்லசிரித்தாள்.......

மறுநாள் கிறிஸ்துமஸ் இன்னும் மனைவிக்கு பரிசுப்பொருள் வாங்கவில்லை என்ற எண்ணம் எனக்குள்ளே வந்து மோதியது.வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை பணம் இல்லை என்பதைத் தவிர.
கிளாரா என் மனைவி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். என்னைப்போன்ற ஒரு சாமானியனை , அடுத்தவேளை உணவுக்கு வழி தெரியாமல் தவிப்பவனை காதலித்து மணமுடித்ததை தவிர வேறு பாவங்களை அறிந்திராதவள்.
அவளது அழகைப்பற்றி சொல்லவில்லை அல்லவா? தேவதையை பார்த்திருகிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் பார்த்து என்னவளை தான்.அவளது கூந்தல் அதன் அழகினை வார்த்தைகளால் கூற முடியாது.. அதுதான் தேவதை என்றுவிட்டயே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
யாரோ ஒரு பிரபுவுக்குமனைவியாகி இருந்திருக்க வேண்டியவள் எனக்கே சொந்தமாகியதால் உடல் மெலிந்து அவள் படும் கஷ்டம் என்னால் தாளமுடியவில்லை. என்னால் தானே இவ்வளவும் .ஒரு இளவரசி ஒரு கூலி தொழிலாளியை காதலித்தால் பிறகு வேறு என்ன பலனை அனுபவிக்க இயலும்?
சரி இன்றைய நிகழ்வுக்கு வருவோம். நாளை கிறிஸ்துமஸ் அவளுக்கு என்ன பரிசு வாங்குவது? அவள் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. கேட்டலும் என்னால் வாங்கித்தர இயலுமா என்பது என் அன்றைய வருமானத்தை பொறுத்தது.
சரி அவளுக்கு வாங்குவதை பற்றி நான் பேசுவது சற்றே ஆச்சர்யம்தான் ஏனென்றால் என்னிடம் 10 சென்ட் கூட இல்லை.ஆனால் அவளுக்கு எதாவது வாங்கியாக வேண்டும். எவ்வாறு சிந்தித்துக்கொண்டே மணியை பார்த்தேன்.
கடிகாரம் 5 காட்டியது.பழைய கடிகாரம் என்றாலும் கடிகார சங்கிலி மட்டுமே அறுந்து போய்விட்டிருந்தது. எனவே கடிகாரதினைவிற்று எதாவது வாங்கலாம் என முடிவு செய்தேன். அது பழைய கடிகரமாக இருந்தாலும் ஐந்து டாலருக்கு போனது.
தெம்புடன் பரிசுப்பொருள் விற்கும் கடைக்கு நடந்தேன். அங்கு ஐந்து டாலருக்குள் உள்ள பொருளை தேடினேன். அப்போது ஒரு சீப்பு என் கண்ணில் பட்டது. அது யானை தந்தத்தாலனது . விலை எட்ட்டு டாலர் என்றான். ஒருமுறை என்னவள் பக்கத்து வீட்டுகாரியின் தந்தத்தாலான சீப்பினை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தது என் கண் முன்னே வந்து சென்றது.அவள் என்னை திருமணம் செய்யாமல் அவள் வீட்டிலேயே இருந்தால் கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பாள் என்று தோன்றியது.
இனி அதைப்பேசி ஒன்றும் இல்லை.சரி என்னவளுக்கு அவள் ஆசைப்பட்டதை வங்கிதர எனக்கொரு தருணம் வாய்த்தது. இருப்பது ஐந்து டாலர்.வேண்டியது 3 டாலர்.என்ன செய்வது என பார்க்கையில் அந்த கூட்டம் என் கண்ணில் பட்டது. ஒருவன் பச்சை மிளகாய்கலை வைத்து சவால் விட்டுக்கொண்டிருந்தான்.
மிளகாய்கள் அத்தனையையும் தின்று தீர்ப்பவர்களுக்கு 3 டாலர் பரிசாக அறிவித்துக்கொண்டிருந்தான். என் கண்முன் பரிசைப்பார்த்து ஆன்ந்தப்படும் என் மனைவி மட்டுமே நின்றிருந்தாள். அவளுக்காக மிளகாய்களை தின்று 3 டாலர்களை வங்கிக்கொண்டு போய் அந்த சீப்பினை வாங்கியபோது மிளகாயின் காரம் நீங்கி என்னவளின் முத்தம்தான் என் நினைவில் நின்றது..
இதோ வீடு திரும்பிவிட்டேன் என்னவளைக்காண. இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முத்தம் இட்டுக்கொண்டோம்.அவளிடம் நான் என் பரிசுப்பொருளை நீட்டினேன்.அவள் முகத்தை நோக்கினேன் புன்சிரிப்பைக்காண.அவளோ எனக்கொரு பரிசு வாங்கி வைத்திருந்தாள்.அது எனது கடிகாரத்துக்கு ஒரு புதிய சங்கிலி.என் கையில் கடிகாரம் இல்லாதிருப்பதைக்கண்டு வினவினாள்.

காரணத்தைக் கூறினேன்.அவசர அவசரமாக பரிசுக்கவரைப் பிரித்துப்பார்த்துவிட்டு மெல்லசிரித்தாள்.அவள் சிரிப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?" நான் உனக்காக என் கூந்தலை விற்று கடிகாரச்சங்கிலி வங்கினேன்.நீயோ இல்லாத என் கூந்தலுக்கு உன் கடிகாரத்தையே விற்று தந்தச்சீப்பு வாங்கியுள்ளாய் ".......................................................................

Friday, June 6, 2008

தசாவதாரத்தில் 10 வேடங்கள்

நம்பி என்ற வைணவர், பத்தடி உயர கலிஃபுல்லா, அமெரிக்க புஷ், பாடகர் அவதார் சிங், அமெரிக்க விஞ்ஞானியாக, ஜப்பானியராக, மூதாட்டி கிருஷ்ணா பாட்டி, ஆப்பிரிக்க நீக்ரோ, வழக்கமான ஹீரோ, கஸ்டம்ஸ் அதிகாரி பல்ராம் நாயுடு.

IT - கலாச்சார சீரழிவு

நண்பர்களே நான் பலமுறை இந்த மாதிரி உரையாடல்களை கேள்விப்பட்டதுண்டு. நானும் ஒரு மென்பொறியாளர் இந்த துறை சார்ந்தவன் என்ற முறையில் இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்...
தகவல் தொழில்நுட்ப துறையினர் என்றால் ஏதோ அவர்கள் நமது கலாச்சாரத்தினை சீரழிப்பதற்கென்றே உள்ளவர்களபோல சில திரைப்படங்களும் சித்தரிக்கின்றன.ஏன் வேறு துறைகளில் உள்ளவர்கள் எல்லோரும் உத்தமர்களா ? யாரோ சிலர் அவ்வாறு இருப்பதைக்கொண்டு எல்லாரையும் அவ்வாறு எடைபோடுவது மிகவும் தவறானது. இந்த துறையினரைப்பற்றி இவ்வளவு குறைகளை கூறுபவர்கள் இதில் உள்ள மன உளைச்சல்களை பற்றி முழுமையாக அறிவார்களா? தினந்தோறும் நங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்துகொண்டுதான் பேசுகிறீர்களா?

Tuesday, June 3, 2008

சும்மா ஜாலிக்கு!!!

ஒரு ஊருல ஒரு காக்காவும் ஒரு நரியும் இருந்துச்சாம். பக்கத்துல pizzahut ல pizza செஞ்சிட்டு இருந்தாங்களாம் ஒரு பாட்டி . உடனே இந்த காக்காவும் நரியும் plan பண்ணி அத திருட திட்டம் போட்டுசாம்.பாட்டி அந்த பக்கம் திரும்பின உடனே காக்கா pizza வ திருடிட்டு பறந்துபோய் ஒரு மரகிளையில உக்காந்துசாம். pizza அதோட வாயில கவ்விட்டு இருந்துச்சாம். உடனே நரி ஒரு plan பண்ணி காக்காகிட்ட இருந்து pizza வ அபகரிக்க திட்டம் போட்டுசாம். அதன் படி காக்கா கிட்ட போய் காக்கா காக்கா நீ ரொம்ப அழகா படுவாயமே எனக்காக ஒரு பாட்டு பாடுன்னு சொல்லிச்சாம். காக்கையும் pizza இருக்கிறத மறந்திட்டு கா கா னு கத்திசாம். pizza உடனே கீழே விழுந்ததும் நரி அவசர அவசரமா ஓடி அத எடுத்து தின்னுடுச்சாம். ஆனா pizza சேராம போய் டயரியா வந்து செத்து போச்சாம்

இதுல இருந்து என்ன தெரியுது????

..
..
..
..
..
..
..
..
..
எதுவா இருந்தாலும் மொதல்ல எதிரிக்கு குடுத்து டெஸ்ட் பண்ணதுக்கு அப்புறம் தான் சாபிடனும்...இது எப்பிடி இருக்குங்கோ....


திவ்விய தரிசனம் !!!!

தூங்கற குழந்தைய தட்டி எழுப்பினது மாறி பெருங்குரலெடுத்து அலறியது டைம் பீஸ் .கண் திறந்து மணியைப் பார்த்தேன் . அடக்கடவுளே ! மணி ஏழைக்காட்டியது.
அய்யகோ திவ்விய தரிசனம் காண நேரமாகிவிட்டதே!!! என அரக்கபரக்க எழுந்து பல்துலக்கி குளித்துமுடிக்கையில் மணி ஏழு இருபது. அறைக்கு வெளியே சென்று அம்மாவை அவசரப்படுத்தி காலை உணவை முடித்து வெளியே கிளம்பினேன். மணியை பார்த்தால் மணி ஏழு நாற்பது. மனது பரபரவென அடித்துக்கொண்டு வேகமாக ஓடி வண்டியை கிளப்பினேன்.சும்மாவா திவ்விய தரிசனம் ஆயிற்றே . இரண்டு வருடங்களாக தொடர்ந்து கண்டுகொண்டு இருக்கிறேன். வண்டி தெருவைக்கடந்து சிக்னலில் நின்று பிசைக்கரனின் "அய்யாசாமி " ஆட்டோ டிரைவரின் "சாவு கிராக்கி " எல்லாம் தாண்டி இதோ வந்து விட்டேன் . என் திவ்யாவின் தரிசனத்துக்காக!!!!!!!
ஹிஹி ஹிசும்மா ஒரு ஜாலிக்கு ட்ரை பண்ணேன்... ஹொவ் இஸ் இட் ???

சிபிஎஸ்இ பாடமான ரஜினி!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து, சிபிஎஸ்இ 6ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த ஆண்டு ரஜினிக்கு சூப்பர் ஆண்டு. ஆண்டின் தொடக்கத்தில், என்டிடிவியின் சிறந்த பொழுதுபோக்காளர் விருதினை பிரதமர் மன்மோகன் சிங் கையால் பெற்றார்.அதன் பின்னர் சில மாதங்களுக்கு முன்பு மை நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற அவரது வாழக்கை வரலாற்று நூல் வெளியானது.இந்த நிலையில் இப்போது ரஜினிகாந்த்தின் வாழ்க்கை குறித்த ஒரு பகுதி, சிபிஎஸ்இ 6ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தில் இடம் பெற்றுள்ளதாம்.இந்தியாவிலேயே ஒரு நடிகரின் வாழ்க்கை வரலாறு குறித்த பாடம், அதிலும் சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.டிக்னிட்டி ஆப் ஒர்க் என்ற தலைப்பின் கீழ் ரஜினி குறித்த பாடப் பகுதி இடம் பெற்றுள்ளது. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இதை பிரசுரித்துள்ளது. பஸ் கண்டக்டராக இருந்து, சூப்பர் ஸ்டராக உயர்ந்தது வரையிலான ரஜினியின் வாழ்க்கை நிலையை இதில் சுருக்கமாக கூறியுள்ளனர்.70களில் பெங்களூரில், கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ரஜினி கண்டக்டராக பணியாற்றியபோது, அவருடன் டிரைவராகப் பணியாற்றிய, ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான பகதூர், ரஜினி குறித்து சொல்வது போல இந்தப் பாடம் அமைந்துள்ளது.பகதூர்தான் ரஜினியின் நடிப்பாற்றலை உணர்ந்து, அவரை சென்னை அடையாரில் உள்ள திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு ஊக்குவித்தவர். அவர்தான் ரஜினியை கட்டாயப்படுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தார். ரஜினி சென்னைக்கு வந்து 2 ஆண்டுகள் படித்தபோது, அவருக்கான செலவுகளையும் பகதூரே பார்த்துக் கொண்டார்.இன்னும் பகதூருடனான ரஜினியின் ஆழமான நட்பு, இருவரும் பிரியாமல் நட்போடு இருப்பதற்கான காரணம் உள்ளிட்டவையும் இதில் விளக்கப்பட்டுள்ளது.மொத்தம் 230 வார்த்தைகளில் இப்பாடம் அமைந்துள்ளது. பாடத்தின் இறுதியில், மாணவ, மாணவியருக்கு கேள்விகளும் கொடுக்கப்பட்டுள்ளன.கடின உழைப்பு பலன் தரும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே ரஜினி குறித்த பாடம் வைக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யுனிவர்ச்சி பிரஸ்ஸின் நிர்வாக இயக்குநர் மன்சர் கான் கூறியுள்ளார்.சாதாரண நிலையிலிருந்து மிகப் பெரிய சூப்பர் ஸ்டார் நிலைக்கு ரஜினி உயர்ந்திருப்பதை ஒவ்வொரு குழந்தையும் மனதில் கொண்டு, தாங்களும் அது போல உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர் என்கிறார்.

தற்சமயம் பார்ப்போர்