Wednesday, November 26, 2008

சமீபத்திய பொருளாதார பிரச்சினையை விளக்கும் கதை

வணக்கம் நண்பர்களே! ரொம்ப நாளைக்குப்பிறகு ப்லொக்குக்கு வந்திருக்கிறேன். இது தற்போதுள்ள பொருளாதார சூழலை விளக்கவல்ல சிறுகதை. 
சரி கதையின் ஆரம்பம்
அது ஒரு சிறு தீவு நாடு.அதாவது அந்த நாட்டின் நிலப்பரப்பு அந்த தீவு மட்டுமே. அந்த தீவில் புழக்கத்தில் உள்ளது 2 ரூபாய் மட்டுமே.அதாவது 2 ஒரு ரூபாய் நாணயங்கள் மட்டுமே. அந்த நாட்டில் உள்ள 3 குடிமகன்களை A B C எனக்கொள்வோம்.A ஒரு ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் B மற்றும் C இருவரும் ஆளுக்கு ஒரு ருபாய் நாணயங்களையும் கொண்டுள்ளனர்.  
தற்போது B, Aயிடமிருந்து 1 ரூபாய்க்கு அந்த நிலத்தை வாங்குகிறார்.எனவே A மற்றும் C ஆளுக்கொரு ஒரு ரூபாய் நாணயங்களையும் B நிலத்தயும் கொன்டுள்ளனர்.அதாவது அந்த நாட்டின் மொத்த சொத்து 3 ரூபாய் = 2x1 ரூபாய்+1 ரூபாய் மதிப்புள்ள நிலம்.
அந்த நாட்டில் ஒரு சிறு நிலப்பரப்பே உள்ளதால் அதன் மதிப்பு பன்மடங்கு உயரும் என C நினைத்தார்.எனவே அவர் A யிடமிருந்து 1 ரூபாய் கடனாக பெற்று தன்னிடமுள்ள 1 ரூபாயையும் சேர்த்து நிலத்தை B யிடமிருந்து 2 ரூபாய்க்கு வாங்குகிறார். இப்போது 
* A யிடம் C க்கு 1 ரூபாய் கடன் உள்ளது.  
* B தன்னிடமிருந்த நிலத்தை 2 ரூபாய்க்கு விற்று 2 ரூபாய் வைத்துள்ளார்.
* C 2 ரூபாய் மதிப்புள்ள நிலத்தயும் Aவிடம் 1 ரூபாய் கடனும் வைத்துள்ளார்.எனவே அவரது மொத்த சொத்து மதிப்பு 1 ருபாய். எனவெ அன்னாட்டின் மொத்த சொத்து மதிப்பு இப்போது 4 ரூபாய் = Bன் 2 ரூபாய்+ C வைத்துள்ள 2 ரூபாய் மதிப்புள்ள நிலம்.   A தன்னிடமிருந்த நிலத்தின் மதிப்பு அதிகமானதை உணர்ந்து அதை திரும்ப கைப்பற்ற நினைத்தார். அதிர்ஷ்டவசமாக அவர் Cக்கு 1 ரூபாய் கடனளித்து இருந்தார்.எனவே B யிடம் இருந்து 2 ரூபாய் கடனாகப்பெற்று 3 ரூபாய்க்கு நிலத்தை C யிடமிருந்து வாங்கினார்.அதாவது Cன் கடனைத்தள்ளுபடி செய்து 2 ரூபாய்க்கு நிலத்தை மீட்டார்.  
இப்போது A 3 ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் B அளித்த 2 ரூபாய் கடனையும் கொண்டிருந்தார்.எனவே அவரது மொத்த சொத்து 1 ரூபாய். 
* B 2 ரூபாய் Aக்கு கடனளித்துள்ளார்.எனவே அவரது மொத்த சொத்துமதிப்பு 2 ருபாய்.
* C 2 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்துள்ளார். என்வே நாட்டின் மொத்த் மதிப்பு 5 ரூபாய்.  
B அந்த நிலத்தை வாங்க நினைத்தார்.அவர் C யிடம் 2 ரூபாய் கடனாகப்பெற்றும் Aன் கடனைத்தள்ளுபடி செய்தும் நிலத்தை 4 ருபாய்க்கு வாங்கினார். இப்போது 
* A தனது கடன் அடைக்கப்பெற்று 2 ஒரு ரூபாய் நாணயாங்களையும் கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய்.
* B 4 ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும் C யிடம் 2 ரூபாய் கடனும் கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய்.
* C 2 ரூபாய் Bக்கு கடனளித்துள்ளார்.என்வே அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய். எனவே நாட்டின் மொத்த மதிப்பு 6 ரூபாய்.   இப்போது Cன் மனதில் ஒரு எண்ணம் பிறக்கின்றது. நிலத்தின் மதிப்பு உயர்வது நின்றுவிட்டால் B எப்படி கடனைத்திருப்பியளிப்பார். நாட்டில் உள்ளது 2 ஒரு ரூபாய் நாணயங்கள் தானே.என்வே நிலமும் ஒரு ரூபாய் தான் மதிப்புள்ளது என்று எண்ணினார். இதே எண்ணம் Aக்கும் தோன்றியது.யாரும் நிலத்தை வாங்க முன்வரவில்லை. எனவே முடிவில்,
* A 2 ஒரு ரூபாய் நாணயங்களைக்கொண்டுள்ளார்.எனவே அவரது சொத்து மதிப்பு 2 ருபாய்.
* B 2 ரூபாய் கடனை Cயிடம் இருந்து பெட்ருள்ளார்.அவர் தனது நிலத்தின் மதிப்பு 4 ரூபாய் என எண்ணிக்கொண்டு இருந்தார்.ஆனால் நிலத்தை வாஙும் மற்ற இருவரும் அதை 1 ருபாய்கு மதிப்பதால் அதன் மதிப்பு 1 ருபாய்.எனவெ அவரது சொத்து மதிப்பு 1 ருபாய். 
* c 2 ருபாயை Bக்கு கடனளித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2 ரூபாய். இப்பொது நாட்டின் சொத்து மதிப்பு 3 ரூபாய்...அதாவது Bன் நிலமதிப்பு சரிந்ததால் நாட்டின் சொத்து மதிப்பும் சரிந்தது.  
B திவாலானதாக அறிவிப்பதை தவிர வேறு வழி இல்லை. எனவே C ஒரு ருபாய் மதிப்புள்ள நிலத்தை கைப்பற்றிக்கொள்கிறார்.B திவாலானதால் Cக்கு 2ரூபாய் கடனை திருப்பியளிக்க முடியவில்லை.எனவே Cக்கு 1 ரூபாய் நட்டம். முடிவில்,
* A வெற்றியாளர், B தோல்வியடைந்தவர், C நட்டமடைந்திருந்தலும் சிறிது அதிர்ஷ்டம் உள்ளவர். இதுதான் இப்போது உலக பொருளாதாரத்திலும் நடந்துள்ளது.இங்கு நிலத்திற்கு பதிலாக பங்குகள் விற்பனையில் எற்படும் மாற்றங்கள் மதிப்பை நிர்ணயிக்கின்றன.

No comments:

தற்சமயம் பார்ப்போர்