Saturday, May 17, 2008

இந்தியாவில் போலி மருந்து !!!

இந்தியாவில் விற்பனை செய்யும் மருந்து வகைகளில் சுமார் 20 விழுக்காடு
போலி மருந்துகளே என அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மருந்துகள் நோயை தீர்ப்பதற்கு பதிலாக புது நோய்களை உருவாக்கியும் விடும் அபாயம் உள்ளது. மரணத்துக்கு வழிகோலும் இந்த போலி மருந்து விற்பனை ஆண்டுக்கு 25 சதவீதம் வளர்ந்து வருகிறது. உலக அளவில் விற்பனையாகும் போலி மருந்துகளில் 75 சதவீதம் இந்தியாவில் இருந்துதான் சப்ளை ஆகிறது என்று பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றொரு அதிர்ச்சி தகவலை அளித்துள்ளது. இந்த தகவல்கள் இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறையை உசுப்பேற்றியுள்ளது. உயிர்குடிக்கும் போலி மருந்து மார்கெட் குறித்த கண்காணிப்பில் அதிகாரிகள் அதிரடியாக களமிறங்க திட்டமிட்டுள்ளனர்.இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமை அதிகாரி சுரேந்தர் சிங் தலைமையில் போலி மருந்து மார்க்கெட் வேட்டை மேற்கொள்ளப்படுகிறது. 6 மாத கால அவகாசத்தில் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும். மருந்து ஆய்வாளர்களே நோயாளிகளாக சென்று 31,000 மருந்துகளை சாம்பிள்களாக பெற்று பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது...
ஏதோ நல்லது நடந்தா சரி....

2 comments:

சுந்தரா said...

உடம்புக்கு வியாதிவந்தா அதுவே கஷ்டம்...போலி மருந்தை வாங்கி சாப்பிட்டு இன்னமும் கஷ்டப்படணுமா...கடவுளே...

சமூக அக்கறையுடன்கூடிய பதிவுக்கு நன்றி இன்ஷ்ட்ரு கிங்

JKR said...

தங்களது கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே...

தற்சமயம் பார்ப்போர்