Monday, June 9, 2008

அவள் மெல்லசிரித்தாள்.......

மறுநாள் கிறிஸ்துமஸ் இன்னும் மனைவிக்கு பரிசுப்பொருள் வாங்கவில்லை என்ற எண்ணம் எனக்குள்ளே வந்து மோதியது.வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை பணம் இல்லை என்பதைத் தவிர.
கிளாரா என் மனைவி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். என்னைப்போன்ற ஒரு சாமானியனை , அடுத்தவேளை உணவுக்கு வழி தெரியாமல் தவிப்பவனை காதலித்து மணமுடித்ததை தவிர வேறு பாவங்களை அறிந்திராதவள்.
அவளது அழகைப்பற்றி சொல்லவில்லை அல்லவா? தேவதையை பார்த்திருகிறீர்களா? உங்கள் பதில் ஆம் என்றால் நீங்கள் பார்த்து என்னவளை தான்.அவளது கூந்தல் அதன் அழகினை வார்த்தைகளால் கூற முடியாது.. அதுதான் தேவதை என்றுவிட்டயே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.
யாரோ ஒரு பிரபுவுக்குமனைவியாகி இருந்திருக்க வேண்டியவள் எனக்கே சொந்தமாகியதால் உடல் மெலிந்து அவள் படும் கஷ்டம் என்னால் தாளமுடியவில்லை. என்னால் தானே இவ்வளவும் .ஒரு இளவரசி ஒரு கூலி தொழிலாளியை காதலித்தால் பிறகு வேறு என்ன பலனை அனுபவிக்க இயலும்?
சரி இன்றைய நிகழ்வுக்கு வருவோம். நாளை கிறிஸ்துமஸ் அவளுக்கு என்ன பரிசு வாங்குவது? அவள் என்னிடம் எதுவும் கேட்டதில்லை. கேட்டலும் என்னால் வாங்கித்தர இயலுமா என்பது என் அன்றைய வருமானத்தை பொறுத்தது.
சரி அவளுக்கு வாங்குவதை பற்றி நான் பேசுவது சற்றே ஆச்சர்யம்தான் ஏனென்றால் என்னிடம் 10 சென்ட் கூட இல்லை.ஆனால் அவளுக்கு எதாவது வாங்கியாக வேண்டும். எவ்வாறு சிந்தித்துக்கொண்டே மணியை பார்த்தேன்.
கடிகாரம் 5 காட்டியது.பழைய கடிகாரம் என்றாலும் கடிகார சங்கிலி மட்டுமே அறுந்து போய்விட்டிருந்தது. எனவே கடிகாரதினைவிற்று எதாவது வாங்கலாம் என முடிவு செய்தேன். அது பழைய கடிகரமாக இருந்தாலும் ஐந்து டாலருக்கு போனது.
தெம்புடன் பரிசுப்பொருள் விற்கும் கடைக்கு நடந்தேன். அங்கு ஐந்து டாலருக்குள் உள்ள பொருளை தேடினேன். அப்போது ஒரு சீப்பு என் கண்ணில் பட்டது. அது யானை தந்தத்தாலனது . விலை எட்ட்டு டாலர் என்றான். ஒருமுறை என்னவள் பக்கத்து வீட்டுகாரியின் தந்தத்தாலான சீப்பினை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தது என் கண் முன்னே வந்து சென்றது.அவள் என்னை திருமணம் செய்யாமல் அவள் வீட்டிலேயே இருந்தால் கூட மகிழ்ச்சியாக இருந்திருப்பாள் என்று தோன்றியது.
இனி அதைப்பேசி ஒன்றும் இல்லை.சரி என்னவளுக்கு அவள் ஆசைப்பட்டதை வங்கிதர எனக்கொரு தருணம் வாய்த்தது. இருப்பது ஐந்து டாலர்.வேண்டியது 3 டாலர்.என்ன செய்வது என பார்க்கையில் அந்த கூட்டம் என் கண்ணில் பட்டது. ஒருவன் பச்சை மிளகாய்கலை வைத்து சவால் விட்டுக்கொண்டிருந்தான்.
மிளகாய்கள் அத்தனையையும் தின்று தீர்ப்பவர்களுக்கு 3 டாலர் பரிசாக அறிவித்துக்கொண்டிருந்தான். என் கண்முன் பரிசைப்பார்த்து ஆன்ந்தப்படும் என் மனைவி மட்டுமே நின்றிருந்தாள். அவளுக்காக மிளகாய்களை தின்று 3 டாலர்களை வங்கிக்கொண்டு போய் அந்த சீப்பினை வாங்கியபோது மிளகாயின் காரம் நீங்கி என்னவளின் முத்தம்தான் என் நினைவில் நின்றது..
இதோ வீடு திரும்பிவிட்டேன் என்னவளைக்காண. இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முத்தம் இட்டுக்கொண்டோம்.அவளிடம் நான் என் பரிசுப்பொருளை நீட்டினேன்.அவள் முகத்தை நோக்கினேன் புன்சிரிப்பைக்காண.அவளோ எனக்கொரு பரிசு வாங்கி வைத்திருந்தாள்.அது எனது கடிகாரத்துக்கு ஒரு புதிய சங்கிலி.என் கையில் கடிகாரம் இல்லாதிருப்பதைக்கண்டு வினவினாள்.

காரணத்தைக் கூறினேன்.அவசர அவசரமாக பரிசுக்கவரைப் பிரித்துப்பார்த்துவிட்டு மெல்லசிரித்தாள்.அவள் சிரிப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?" நான் உனக்காக என் கூந்தலை விற்று கடிகாரச்சங்கிலி வங்கினேன்.நீயோ இல்லாத என் கூந்தலுக்கு உன் கடிகாரத்தையே விற்று தந்தச்சீப்பு வாங்கியுள்ளாய் ".......................................................................

2 comments:

இக்பால் said...

கதை சொல்லிருக்கும் விதம் அருமை. இந்த கதையை முன்னமெ என் பதிவில்இட்டிருக்கிறேன். தமிழ்குடிமகனுக்கு பிடித்த பிடித்த ஆங்கில கதை இது.

JKR said...

பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே...

தற்சமயம் பார்ப்போர்